உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்
உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 25, 2024 07:14 PM

சென்னை: மொழி அறிவை கல்வி அறிவோடு இணைத்திருப்பதால் உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம். என சென்னையில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்
தொடர்ந்து அவர் கூறியதாவது: தாய்மொழிக்காக தமிழகத்தில் நடந்த போராட்டம் போன்று உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.,விடம் அடகுவைத்து விட்டார் ஈ.பி.எஸ்., ஈ.பி.எஸ் துரோகங்களை சிறுபான்மையின மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் ஈ.பி.எஸ். இண்டியா கூட்டணி வெற்றியில் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.பா.ஜ.தொடர்ந்து மாநிலங்களில் இந்தி மொழியை திணித்து வருகிறது.வரும் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை, தோற்கடிக்க வேண்டும். தன்னுடைய நாற்காலியை காப்பாற்றுவதிலேயே நான்கு ஆண்டுகாலத்தை ஓட்டி விட்டார்.ஈ.பி.எஸ்
உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம்
மொழி அறிவை கல்வி அறிவோடு இணைத்திருப்பதால் உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நான் நிமிர்ந்து நிற்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.