''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை
''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை
ADDED : ஆக 19, 2024 06:04 PM

சென்னை: ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம்'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,19) சமஸ்கிருத தின விழா நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என். ரவி உடன் தனியார் தொண்டு நிறுவன பொது செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஶ்ரீநிவாஸ் வரகெடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமஸ்கிருதம் மற்றும் இலக்கியத்திற்கு பங்காற்றிய பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசினை கவர்னர் ரவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம். நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு சமஸ்கிருத மொழியை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' எனப் பேசினார்.

