தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தெளிவான விளக்கம் வேண்டும்: கேட்கிறார் முதல்வர்

தெளிவான விளக்கம் வேண்டும்: கேட்கிறார் முதல்வர்

தெளிவான விளக்கம் வேண்டும்: கேட்கிறார் முதல்வர்


ADDED : ஜூன் 04, 2025 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 அன்று தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, பார்லிமென்டில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ., வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டில்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us