ADDED : ஆக 05, 2025 02:48 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வாகையடிமுனையில் கொட்டும் மழையில் நனைந்தபடியே, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனுடன் இணைந்து நேற்று, பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
கூட்டணி என்பது காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறும். ஆனால், மக்கள் நிலையானவர்கள். மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
முரசொலி மாறனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது கூட கேபினட் அந்தஸ்துடன் இலாகா இல்லாத அமைச்சர் பொறுப்பு வழங்கினர், பா.ஜ.,வினர். ஆனால், அக்கட்சியினரைத்தான், இன்றைக்கு தி.மு.க., குறை கூறிக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு சட்டத்துக்கு கையெழுத்திட்டது தி.மு.க., 25 மாணவர்கள் நீட் தேர்வுக்காக உயிரிழந்ததற்கு காரணம் தி.மு.க., தான். காங்.,கை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடினார்.
திருநெல்வேலியில் ஜாபர் அலி என்ற ஓய்வு எஸ்.ஐ., தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக முதல்வருக்கு தெரிவித்திருந்தார். நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த எஸ்.ஐ., கொல்லப்பட்டிருக்க மாட்டார். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை .
அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்ற பின், ஏழை என்ற சொல்லே இருக்காது.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.