sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம்: அர்ஜுன் சம்பத்

/

உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம்: அர்ஜுன் சம்பத்

உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம்: அர்ஜுன் சம்பத்

உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம்: அர்ஜுன் சம்பத்

4


ADDED : மார் 12, 2026 04:57 AM

Google News

4

ADDED : மார் 12, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''உயர் நீதிமன்ற அனுமதியுடன், 'தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு' மாநாட்டை நடத்தியே தீருவோம்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: வரும் 15ல், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், 'தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு மாநாடு' நடத்த உள்ளோம். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, மாநாடு நடத்துகிறோம்.

முறையாக அனுமதி பெற்று, மாநாடு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாகக் கூறி, மாநாட்டுக்கு தி.மு.க., அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு, காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்த, காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

மாநாட்டிற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us