ADDED : நவ 19, 2025 06:31 AM

பிரதான கட்சியான காங்கிரஸ், பீஹார் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறது. ஏனென்றால், தேர்தல் ஆணையம், நீதிமன்றம், மத்திய அரசு இணைந்து, தே.ஜ., கூட்டணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளன. அதனால், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில், முதல்வர் துவக்கி இருக்கிற, ஜனநாயகத்திற்கான போரில், இந்திய கம்யூனிஸ்ட் உறுதியாக இருக்கிறது.
பீஹார் தேர்தல் போல், தமிழக தேர்தல் முடிவுகளும் இருக்கும் என சொல்வது ஆரூடம். பீகாரில், ஜாதி,மத உணர்வுகளை தூண்டிவிட முடியும். தமிழகத்தில் அது முடியாது.
தி.மு.க.,வுடன், எங்கள் உறவு வலுவாக உள்ளது. ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு இடங்களை கேட்போம். முதல்வர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, தமிழகத்தில், ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன் வைக்க மாட்டோம்.
- வீரபாண்டியன், மாநில செயலர், இ.கம்யூ.,

