ADDED : அக் 01, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூருக்கு வந்து, உயிர் இழப்பு ஏற்பட்டுள்ள சில குடும்பங்க ளை, காங்கிரசாருடன் இணைந்து சந்தித்தேன். அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
நாங்கள் அரசியல் ரீதியாக பழிசுமத்தும் விளையாட்டை, விளையாட விரும்பவில்லை. தமிழக மக்களுடன் நிற்க விரும்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அப்படித்தான் நினைக்கின்றனர்.
அவர்களின் சார்பாக மக்களை சந்தித்துள்ளோம். ராகுல் எப்போதும் தமிழக மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பவர்.
இந்த துயர சம்பவத்தை அறிந்து, அவர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் சார்பிலேயே கரூருக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
வேணுகோபால்
பொதுச்செயலர், காங்கிரஸ்