ADDED : ஜன 19, 2026 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக மக்களுக்கான முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குடும்பத்தலைவி வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 2,000 ரூபாய்; ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம்; வீடில்லாதவர்களுக்கு இலவச வீடு; பெண்களுக்கு 25,000 ரூபாய் மானியத்தில் இரு சக்கர வாகனம்; 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை, சொன்னதை நிறைவேற்றுவோம்; தி.மு.க.,வை போல் ஏமாற்ற மாட்டோம். அ.தி.மு.க., ஆட்சியில் தான் மிகப்பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
- வேலுமணி: முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

