குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : மார் 12, 2024 01:50 PM

சென்னை: ‛‛ குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு தரப்பு மக்களால் எதிர்க்கப்பட்ட குடியுரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று( மார்ச்11) அறிவிக்கை ஒன்றை மத்திய பா.ஜ., அரசு வெளியிட்டு உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்திய மக்களின் நலனுக்கும், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது. தமிழகத்தை போல், பல மாநிலங்களும் இந்த சட்டத்தினை எதிர்த்து பல்வேறு மாநிலங்களும் குரல் கொடுத்துள்ளன.
இந்தச் சட்டத்தினால், எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்த சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பது தான் இந்த அரசின் கருத்தாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றிட தமிழக அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

