கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம்: பா.ஜ.,
கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம்: பா.ஜ.,
ADDED : ஆக 16, 2025 04:04 AM
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
திருநெல்வேலியில், வரும் 17ம் தேதி, 'பூத் கமிட்டி' பொறுப்பாளர்கள் மாநாடு நடக்கிறது. தமிழக பா.ஜ.,வில் முதல் முறையாக நடக்கும் இந்த நிகழ்வில், தென் மாவட்டத்தின், 28 சட்டசபை தொகுதிகளின், 8,595 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக தெருவெங்கும் போதை மற்றும் சாராயம் ஊற்றெடுக்க, தமிழகத்தை கொலை களமாக மாற்றி, ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் தி.மு.க.,வை, வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே, பா.ஜ.,வின ரின் வேலை அல்ல. தி.மு.க.,வின் நிர்வாக குளறு படிகளால், நிலைகுலைந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை சீர்படுத்தி, சிறக்க செய்வதும் கடமை.
மக்களின் ஓட்டு, நம் சின்னத்தில் விழுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமே, பூத் நிர்வாகிகளின் பொறுப்பல்ல. அவர்களின் குறைகளை கேட்டறிந்து, களப்பணியாற்றுவதும், ஒவ்வொரு பா.ஜ., தொண்டனின் பொறுப்பு தான். தமிழகத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒற்றுமையாக இணைந்து, மக்களோடு மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.