sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

/

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை


ADDED : பிப் 22, 2026 02:53 PM

Google News

ADDED : பிப் 22, 2026 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 23), நாளை மறுநாள் (பிப்ரவரி 24) ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையிலும் பிறகு வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு

தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 23), நாளை மறுநாள் (பிப்ரவரி 24) ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us