UPDATED : அக் 26, 2024 08:09 AM
ADDED : அக் 26, 2024 05:52 AM

சென்னை: 'தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் இன்றும் நாளையும், ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று, மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு, மில்லிமீட்டரில்;
கோவை மாவட்டம்
சோலையாறு 35
சின்கோனா 28
சிறுவாணி அடிவாரம் 26
வால்பாறை பிஏபி 23
சின்னக்கல்லார் 22
பெரியநாயக்கன்பாளையம் 20.6
விமான நிலையம் 11.3
ஆனைமலை 11
அன்னூர் 8.2
ஈரோடு மாவட்டம்
பெருந்துறை 46
கொடுமுடி 42
மொடக்குறிச்சி 31
சென்னிமலை 21.4
கவுந்தப்பாடி 20.4
கோபிசெட்டிபாளையம் 17.2
பவானி 12.4
குண்டேரி பள்ளம் 12.4
பவானிசாகர் 10.2
கரூர் மாவட்டம்
கரூர் பரமத்தி 31.4
அணைப்பாளையம் 26.2
குளித்தலை 21.2
அரவக்குறிச்சி 13
கரூர் 9.8
மதுரை மாவட்டம்
சிட்டம்பட்டி 108.4
இடையப்பட்டி 89
உசிலம்பட்டி 88
சோழவந்தான் 84
குப்பனாம்பட்டி 80
கள்ளந்திரி 74
தல்லாகுளம் 73.6
மதுரை வடக்கு 66.6
பெரியபட்டி 65.4
ஆண்டிப்பட்டி 64.2
கன்னியாகுமரி மாவட்டம்
குளச்சல் 92.4
பூதப்பாண்டி 75.8
அடையாமடை 68.2
பெருஞ்சாணி 64.2
மாம்பழத்துறை ஆறு 63
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை 32.2
குண்டார் அணை 32.6
தென்காசி 20
அரியலூர் மாவட்டம்
அரியலூர் தாலுகா ஆபிஸ் 42
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் 71
நிலக்கோட்டை 71
காமாட்சிபுரம் 24.2
சத்திரப்பட்டி 19.2
நத்தம் 14
பெரம்பலூர் மாவட்டம்
செட்டிகுளம் 42
பாடாலூர் 41
எறையூர் 29
வி களத்தூர் 25
ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானை 19.2
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி 46
சிவகங்கை 41.6
காரைக்குடி 24
தேவகோட்டை 11.6
தேனி மாவட்டம்
மஞ்சளார் 41
தேக்கடி 32
பெரியகுளம் 26.2
வைகை அணை 20.4
பெரியார் 19
ஆண்டிப்பட்டி 19
போடிநாயக்கனூர் 13.6
திருச்சி மாவட்டம்
முசிறி 35
பொன்னையாறு அணை 31.8
சிறுகுடி 24.2
புலிவலம் 15
திருப்பூர் மாவட்டம்
உப்பாறு அணை 72
திருமூர்த்தி அணை 24
மடத்துக்குளம் 20
மூலனூர் 19
நல்லதங்காள் ஓடை 15
தாராபுரம் 9