UPDATED : செப் 28, 2024 11:28 AM
ADDED : செப் 28, 2024 06:53 AM

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை துறையின் புயல்கள் தொடர்பான அறிக்கை:
மேற்கு திசை காற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. கடலின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் அடிப்படையில், இந்திய பெருங்கடலில், அட்ச ரேகை பகுதியில், அந்தமானுக்கு தெற்கில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது.
இந்த சுழற்சி, மேக கூட்டங்களின் அடர்த்தி மற்றும் கடல்பரப்பு வெப்பநிலையால், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இது, கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இன்று: கோவை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.
நாளை: கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்:
ஸ்ரீவில்லிபுத்துார் 8.3 செ.மீ.,
சாத்துார் 8.3 செ.மீ.,
ஆற்காடு 6.2 செ.மீ.,
வாழப்பாடி 7.1 செ.மீ.,
வாலாஜா 5.7 செ.மீ.,
ஆனைமடுவு அணை 5 செ.மீ.,
ராசிபுரம் 3.6 செ.மீ.,
எடப்பாடி 3.6 செ.மீ.,
பள்ளிப்பட்டு 3.5 செ.மீ.,
செம்பரம்பாக்கம் 3.4 செ.மீ.,
வட்டனம் 3.4 செ.மீ.,
கிருஷ்ணராயபுரம் 3.3 செ.மீ.,
வாணியம்பாடி 3.2 செ.மீ.,
மாயனுார் 3.1 செ.மீ.,
கோவில்பட்டி 3 செ.மீ.,
எருமப்பட்டி 3 செ.மீ.,
கோபிசெட்டிபாளையம் 3 செ.மீ.,