தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/மாணவியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்களுக்கு வலை

மாணவியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்களுக்கு வலை

மாணவியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்களுக்கு வலை


UPDATED : அக் 13, 2026 09:17 PM

ADDED : அக் 13, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 09:17 PM ADDED : அக் 13, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம்: நாகை அருகே, 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய சாமி, 22, உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம், நிரவியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. அதே பகுதி பள்ளியில், 9ம் வகுப்பு படித்தார். பெற்றோர் இறந்து விட்டதால், பாட்டியின் பராமரிப்பில் வசிக்கிறார்.

நாகை மாவட்டம் பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் சாமி. இவர், மாணவியிடம், காதலிப்பதாக கூறி, நெருங்கி பழகியுள்ளார். பின், மாணவியை விட்டு விலகியுள்ளார். இதையறிந்த ஏர்வாடியை சேர்ந்த ராகேஷ், 23, என்பவர் மாணவியை, காதலிப்பதாக கூறி பழகியுள்ளார்.

இந்நிலையில், அக்., 6ல் மாணவிக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரது பாட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், மாணவி, ஏழு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. திருக்கண்ணப்புரம் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான, இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us