தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஹிந்திக்கு மாறிய இணையதளம்: எல்.ஐ.சி., விளக்கம்

ஹிந்திக்கு மாறிய இணையதளம்: எல்.ஐ.சி., விளக்கம்

ஹிந்திக்கு மாறிய இணையதளம்: எல்.ஐ.சி., விளக்கம்


ADDED : நவ 20, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, எல்.ஐ.சி., இணையதளத்தின் முகப்பு பக்கம் ஹிந்திக்கு மாறியதாக, அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால், நேற்று காலை திடீரென அது ஹிந்திக்கு மாறியது. ஆங்கில மொழியை தேர்ந்தெடுக்கும் குறிப்பு கூட ஹிந்தியில் இருந்தது.

இது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்று, முதல்வர் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்தியில், 'இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, முகப்பு பக்கம் ஹிந்தி மொழிக்கு மாறியுள்ளது. தற்போது, அது சரி செய்யப்பட்டு, ஆங்கிலம், ஹிந்தியில் தெரியும் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us