ADDED : செப் 08, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக 22ம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன், 108 சங்கு பூஜை நடந்தது.
பின், மூலவர் அபிஷேகத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை சுவாமி வீதியுலா நடந்தது.