ADDED : ஜன 30, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஸ்பெயின் சென்றுள்ள முதல்வரை, இந்திய துாதர் வரவேற்றார்.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக, கடந்த 27ம் தேதி இரவு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை, ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
அவரை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய துாதர் தினேஷ் கே பட்நாயக், துாதரக அதிகாரிகளோடு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். முதல்வரின் ஸ்பெயின் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா உடனிருந்தார்.
ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், விமான பயணத்தில், உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் விளையாட்டு வீரர் நோவாக் ஜோகோவிச்சை சந்தித்தார்; அவருடன் படம் எடுத்துக் கொண்டார்.