ADDED : ஜூலை 16, 2011 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கிணற்றை ஆழப்படுத்தியபோது, அதன் பக்கவாட்டுச் சுவர் திடீரென சரிந்து விழுந்ததில், தொழிலாளிகள் இருவர் பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த தளவாய்புரம் அருகே, பாலமுருகன் என்பவரது கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளிகள் கடந்த 10 நாளாக ஈடுபட்டனர்.
நேற்று மாலை கிணற்றுக்குள் தோண்டப்பட்ட கற்கள், 'விஞ்ச்' மூலம் மேலே கொண்டு வரப்பட்டன. அப்பணிக்காக கிணற்றுக்குள் நின்ற நாராயணன், 45, கருப்பசாமி, 47, மீது கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து இருவரும் பலியாகினர்; மற்ற ஐந்து பேர் காயமின்றி தப்பினர். கயத்தாறு போலீசார் விசாரித்தனர்.