ADDED : டிச 15, 2024 09:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் வந்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடக்கும். நேற்று நடந்த பவுர்ணமி பூஜைக்கு, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் வந்தார்.
அங்கு நடந்த பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு, மதியம் உணவு அருந்திவிட்டு, கோவை சர்க்யூட் ஹவுஸ் புறப்பட்டு சென்றார்.
கவர்னர் வருகையை ஒட்டி, கோவில் மற்றும் வட்டாரங்களில், பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.