பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி
பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி
ADDED : பிப் 23, 2026 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு, தமிழக சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது, ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு.
தற்போது, டில்லி போலீசார் திருப்பூர் வந்து, பயங்கரவாதிகளை கைது செய்யும் வரை, தி.மு.க., அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்ன செய்து கொண்டு இருந்தது?
தி.மு.க., ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்துக்கு வழிவகுத்து விடுமோ என, மக்கள் அச்சப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

