அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு: திருப்பிக் கேட்கிறார் திருமா!
அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு: திருப்பிக் கேட்கிறார் திருமா!
ADDED : அக் 24, 2024 12:58 PM

புதுச்சேரி: 'வரும் 2026ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா' என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, 'அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்' என திருமாவளவன் பதில் அளித்தார்.
புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: தமிழத்தில் மழை, புயல், வெள்ளம் பாதிப்பு இல்லை. இப்போது விமர்சனம் செய்வதற்கு ஏதுமில்லை. மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அரசு மீது வேண்டுமென்று திட்டமிட்டு திரும்ப திரும்ப விமர்சனம் என்ற பெயரால், களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
அன்பு சகோதரர் விஜய் அவர்கள் கட்சி துவங்கி, முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.