ADDED : டிச 14, 2025 03:33 AM

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஏமாந்து விடக்கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக இருந்து செயல்பட்டது. எஸ்.ஐ.ஆர்., மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வரும் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் தான், யாரெல்லாம் சேர்க்கப்பட்டு உ ள்ளனர்; நீக்கப்பட்டுள்ளனர் என்ற முழு விபரம் தெரியவரும். வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளதாக கூறும் நிலையில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அது எப்படி என புரியவில்லை.
பீஹாரில் நடந்தது போல், தமிழகத்தில் நடக்காது. தமிழகம் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வாழ்ந்த மண். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. அப்படியே தவறு நடந்தாலும், தி.மு.க., நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டும்.
- ஆர்.எஸ்.பாரதி அமைப்பு செயலர், தி.மு.க.,

