ஸ்டாலின் கட்டடக்கலை என்றால் என்ன?: தமிழக அரசு விளக்கம்
ஸ்டாலின் கட்டடக்கலை என்றால் என்ன?: தமிழக அரசு விளக்கம்
ADDED : ஜூலை 27, 2025 02:51 AM

சென்னை: 'பொதுப்பணித்துறை கட்டியுள்ள கட்டடங்கள், எதிர்கால வரலாற்றில், 'ஸ்டாலின் கட்டடக்கலை' என போற்றி புகழப்படும்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு, சிறப்பு சேர்க்கும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில், பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 2015ல் அறிவிப்பு வெளியிட்டு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, இதுநாள் வரை கட்டாமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், கடந்த ஓராண்டில் , சென்னை கிண்டி யில், 240.53 கோடி ரூபா யில், கலைஞர் நுாற் றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையை, ஆறு தளங்களுடன் கட்டி, பயன்பாட் டிற்கு கொண்டு வந்துள்ளார்.
சென்னை கொளத்துாரில், 210.80 கோடி ரூபாயில், உயர் சிறப்பு மருத்துவமனை கட்ட, கடந்த ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த ஆண்டு திறக்கப்பட்டது.
அதேபோல, 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டடங்கள், 4,179 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள, அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு, 218 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருப்பத்துார், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்டங்களில், 452.76 கோடி ரூபாயில், கலெக்டர் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில், 18.42 கோடி ரூபாயில், கீழடி அருங்காட்சியக கட்டடம்; மதுரையில், 218.84 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம்; 62.77 கோடி ரூபாயில், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு அரங்கம்.
மேலும், 53.73 கோடி ரூபாயில் கருணாநிதி நினைவிடம்; கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாயில், கண்ணாடி இழைப் பாலம் போன்றவை கட்டப்பட்டு உள்ளன.
இதுதவிர பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புத்தம் புதிய உயர் தொழில்நுட்பங்களுடன் கட்டப்படும், இந்த திட்டங்கள் எல்லாம், எதிர்கால வரலாற்றில், 'ஸ்டாலின் கட்டடக்கலை' என போற்றி புகழப்படும் அளவுக்கு பெருமைக்குரிய கட்டடங்களாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

