மாணவர்களுக்கு பட்டங்கள் எப்போது: காலக்கெடு விதித்தார் கவர்னர்
மாணவர்களுக்கு பட்டங்கள் எப்போது: காலக்கெடு விதித்தார் கவர்னர்
ADDED : நவ 03, 2024 02:09 PM

சென்னை: அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என துணைவேந்தர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், கல்வித் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திடவும், அனைத்து பல்கலைகளிலும் பட்டமளிப்பு விழாவினை குறித்த நேரத்தில் கவர்னர் நடத்தினார்.தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் அக்., 31ம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் 3 பல்கலைகளில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கியதுடன், மேலும் 19 பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 8,27,990 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 19 அரசுப் பல்கலைழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்., மாத இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.