UPDATED : மார் 08, 2024 06:28 AM
ADDED : மார் 07, 2024 11:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை: லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பி, விண்ணப்பம் அளித்தவர்களுக்கான நேர் காணல், நாளை மறுதினம் முதல் நடக்க உள்ளது.
அன்று காலை 9:00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், விண்ணப்பம் அளித்தவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட உள்ளார்.
நேர்காணலின் போது, அந்தந்த லோக்சபா தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

