தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘டெட்’ தேர்வு எப்போது?

‘டெட்’ தேர்வு எப்போது?

‘டெட்’ தேர்வு எப்போது?


UPDATED : அக் 29, 2026 10:48 PM

ADDED : அக் 29, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:48 PM ADDED : அக் 29, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பொது ஆசிரியர் தகுதித்தேர்வான ‘டெட்’ குறித்த அறிவிப்புக்காக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தேர்வு நடந்த நிலையில், 11 மாதங்களாகியும் அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வும், ஆசிரியர் பணியை எதிர்பார்க்கும் பி.எட்., பட்டதாரிகளுக்கு பொது டெட் தேர்வும் நடத்தப்படுகின்றன.

கடந்த ஜூலையில் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடந்தது. அடுத்த தேர்வு டிச., 20ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், பொது டெட் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பி.எட்., பட்டதாரிகள் கூறுகையில், ‘ஆண்டுக்கு இருமுறை ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும். நடப்பாண்டில் ஜூலை மற்றும் டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை பொது ‘டெட்’ தேர்வு அறிவிக்கப்படவில்லை.

இதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், தேர்வு அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us