ADDED : ஆக 22, 2024 02:48 AM
புள்ளியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஜூன்26ல் நடத்த அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த கவுன்சிலிங்கின்போது விண்ணப்ப தேதி அடிப்படையில் சீனியாரிட்டி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு பணியேற்பு சீனியாரிட்டி என அறிவிக்கப்பட்டு இதற்கான சீனியாரிட்டி பட்டியல் சில நாட்களுக்கு முன்பே அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பட்டியலின் படி கவுன்சலிங்கை எதிர்பார்த்து அலுவலர்கள் சென்னை சென்ற நிலையில் முதல்நாள் இரவோடு இரவாக சீனியாரிட்டி பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டது.
கவுன்சிலிங் துவங்கும் போது சீனியாரிட்டி மாற்றப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்பு அறிவித்த சீனியாரிட்டி பட்டியல் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தக்கோரி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கவுன்சிலிங் ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேதி பின் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின் 2 மாதங்களாகியும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவித்த சீனியாரிட்டி மற்றும் அதன் பின் உருவான காலியிடங்கள் அடிப்படையில் உடனடியாக கவுன்சிலிங் தேதியை அறிவிக்க வேண்டும் என புள்ளிஇயல் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.