ADDED : நவ 30, 2024 09:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தேங்கி உள்ள மழைநீர் குறைந்த பின்பே மின்விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் தேங்கி உள்ள மழைநீர் குறைந்தால் மட்டுமே மின்விநியோகம் செய்யப்படும். திநகர், கோடம்பாக்கம், ஓஎம்ஆர் சாலைகளில் மின்சார பெட்டி வரை தேங்கி இருக்கும் மழைநீரின் அளவு குறைந்ததும் மின்சாரம் விநியோகம் துவங்கும். எங்கு எல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கு எல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

