sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?

/

 நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?

 நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?

 நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?


ADDED : நவ 20, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 20, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு, தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட துவங்கிய நிலையில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக, ஏமாற்று வேலை நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிட்டதாக, தி.மு.க., அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது, 309 கோடி ரூபாய் நிதி?

தி.மு.க., அரசின் ஊழலாலும், தவறுகளாலும் தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் தானே தவிர, தி.மு.க.,வின் கடித நாடகம் அல்ல.

- அண்ணாமலை

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

புல் அவுட்: நெல்லை பாதுகாக்க பிற துறை கிடங்குகள் நடப்பு சீசனில் இதுவரை, 14.18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட வாரியாக, தற்காலிக கிடங்குகள் அமைக்கும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அரசின் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் மற்றும் பிற துறைகளின் கிடங்குகளையும், தற்காலிக நெல் சேமிப்பிற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை, அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு விரைவாக அனுப்பவும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் உள்ள நெல்லை, பாதுகாப்பாக வைக்கவும், அவற்றை கண்காணிக்க, மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில், கொள்முதல் செயல்பாட்டை ஒருங்கிணைக்க, கலெக்டர்களுடன் இணைந்து, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். சக்கரபாணி, உணவுத்துறை அமைச்சர், தி.மு.க.,







      Dinamalar
      Follow us