தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக எங்கே? கேட்கிறார் செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக எங்கே? கேட்கிறார் செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக எங்கே? கேட்கிறார் செங்கோட்டையன்

18


ADDED : நவ 22, 2026 04:29 PM

Follow on GoogleFavourite on Google

18

ADDED : நவ 22, 2026 04:29 PM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை விமான நிலையம் வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது; உன்னால் காலத்தை எதிர்த்து போரிட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை உன்னால் அழிக்க இயலாது. இதுதான் இபிஎஸ்க்கு நடக்கும் நிகழ்வு. ஒவ்வொருவராக தன் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது போது, எந்தவொரு தலைமைக்கும் மன்னிப்புக்கும் தன்மையும், பெருந்தன்மையும் இல்லையோ, அது நீடித்த வரலாறு கிடையாது. அந்த வரலாறு இபிஎஸ்க்கு ஏற்படும்.

இபிஎஸ் திமுகவுடன் சேர்ந்து ஜாக்பாட் அடித்து பார்த்தார். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று நினைத்தார். இபிஎஸ்ஸின் முகத்திரை கிழிந்தது. அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார். அது எந்தக் காலத்திலும் நடக்காது.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது. நூற்றுக்கணக்கானோரை நீக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், எல்லோராலும் உருவாக்கப்பட்ட ஒரு பொதுச்செயலாளர் என்பதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா வேறு, இபிஎஸ் வேறு என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி.

இபிஎஸ் பொதுச்செயலாளராவதற்கு முக்கிய நபராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. கொங்கு மண்டலம் யார் கையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். விஜய் தலைமையில் கொங்கு மண்டலம் சிறப்பான முறையில் இருக்கிறது. தனித்து ஒரு இயக்கம் போட்டியிடும் போதே, 25 எம்எல்ஏக்களைப் பெற்ற பெருமை தவெகவுக்கு இருக்கிறது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் இனி விஜய் தலைமையில் தான் பவனி வரும். இனி இபிஎஸ்ஸை போன்றவர்களை எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டும், இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us