இன்று எங்கெல்லாம் மழை கொட்டப் போகுது தெரியுமா? உங்க ஊர் நிலவரம் இதுதான்!
இன்று எங்கெல்லாம் மழை கொட்டப் போகுது தெரியுமா? உங்க ஊர் நிலவரம் இதுதான்!
ADDED : அக் 16, 2024 06:27 AM

சென்னை: இன்று(அக்.,16) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு, அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்'டும், 14 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'டும் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 22 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட்
வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 21 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.