தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/2 நாளைக்கு கனமழை பெய்யும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

2 நாளைக்கு கனமழை பெய்யும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

2 நாளைக்கு கனமழை பெய்யும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

1


UPDATED : ஜூன் 11, 2026 04:27 PM

ADDED : ஜூன் 11, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 04:27 PM ADDED : ஜூன் 11, 2026 03:33 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவை, நெல்லை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 9.35 செமீ மழை பதிவாகி உள்ளது.

சுமார் 1.5 கிமீ உயரத்தில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.12 கிமீ., உயரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது

இன்று (ஜூன் 12)

சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

ராணிப்பேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

சேலம்

தர்மபுரி

கிருஷ்ணகிரி

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டங்களில் ஓரி இடங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

கனமழை


நீலகிரி

கன்னியாகுமரி மாவட்டங்களில்

கோவை மற்றும் நெல்லையின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 12)

சென்னை,

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

சேலம்

தர்மபுரி

கிருஷ்ணகிரி

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

கடலூர்

தேனி

தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்

நீலகிரி

கன்னியாகுமரி

ராணிப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டங்களிலும்

நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இ டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இ டி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us