UPDATED : ஜன 01, 2024 05:47 AM
ADDED : ஜன 01, 2024 05:44 AM

''ஆளுங்கட்சியில அடுத்த எதிர்பார்ப்பு உருவாகிடுச்சுங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''பொன்முடி மாதிரியே, இன்னும் சில அமைச்சர்களும் சொத்து குவிப்பு வழக்குல சிக்கியிருக்காங்களே... அவங்களுக்கும் தண்டனை கிடைச்சா, அமைச்சர் பதவி போயிடும்...
''அப்ப, எந்த அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும்னு கட்சிக்குள்ள விவாதம் நடக்குதுங்க... இதுல, முதல்வருக்கு நெருக்கமான சென்னை அமைச்சர் ஒருவருக்கு கூடுதல் இலாகாக்கள் கிடைக்குமாம்...
![]() |
''அதேபோல, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவருக்கும் அமைச்சரா பதவி உயர்வு வழங்கவும் வாய்ப்பு இருக்குன்னு, கட்சி நிர்வாகிகள் பேசிக்கிறாங்க...'' என, விளக்கி முடித்தார், அந்தோணிசாமி.
''அண்ணன் எப்ப கிளம்புவான்... திண்ணை எப்ப காலியாகும்னு காத்துண்டு இருக்கா போல...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.