தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எந்த பக்கம் இருந்தால் நல்லது…. ஓபிஎஸ் தான் முடிவு எடுக்கணும்: நயினார் நாகேந்திரன்

எந்த பக்கம் இருந்தால் நல்லது…. ஓபிஎஸ் தான் முடிவு எடுக்கணும்: நயினார் நாகேந்திரன்

எந்த பக்கம் இருந்தால் நல்லது…. ஓபிஎஸ் தான் முடிவு எடுக்கணும்: நயினார் நாகேந்திரன்


UPDATED : பிப் 22, 2026 07:43 PM

ADDED : பிப் 21, 2026 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2026 07:43 PM ADDED : பிப் 21, 2026 12:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: நாங்கள் ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம். எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பது பற்றி ஓபிஎஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அடுத்தது இபிஎஸ் தான் முதல்வராக வருவார். தேஜ கூட்டணி வெற்றி பெறும், 5 வருடமாக சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கையில் புத்தகத்தை எடுக்க வேண்டிய குழந்தைகள் கையில் கஞ்சாவை எடுத்து இருக்கிறார்கள்.

கொங்கு பகுதியில் வயதானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். காரணம் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது. 33 லாக் அப் மரணங்கள் நிகழந்துள்ளது. புழல் சிறையில் கைதிகள் இறந்து போகும் நிலை நீடிக்கிறது. திமுக ஆட்சியால் மக்களுக்கு நல்லாட்சியை தர முடியவில்லை.

வெறும் பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பணப்பெட்டியை வாங்கி கொண்டு தான் கூட்டணியில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி வலுவடைந்து உள்ளது. அவர்களது கூட்டணி வலுவிழந்துள்ளது. மக்கள் தேஜ கூட்டணி பக்கம் இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்தியாவை உலக நாடுகளில் மிக சிறந்த நாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைக்கு பிரதமர் மோடியை பார்த்து இறங்கி வந்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் புதிய ஒப்பந்தம் போட்டு, புதிய முதலீடுகள் இன்றைக்கு இந்தியாவுக்கு வந்துள்ளது.

நாங்கள் நிச்சயமாக 200 இடங்களில் வெல்வோம். ஓபிஎஸ் எந்த நிலையில் முதல்வரை சென்று பார்த்தார் என்று நமக்கு தெரியவில்லை. நாங்கள் ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம். எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பதை பற்றி ஓபிஎஸ்தான் முடிவெடுக்க வேண்டும். நான் கூட முதல்வர் ஸ்டாலினை சட்டசபையில் சந்தித்தேன்.

அப்போது இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். எந்த கோணத்தில் அவர் பார்த்தார் என்று தெரியவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது.எல்லோரும் பெயரிலும் ஈடி வழக்கு இருக்கிறது. நீதிமன்ற கருத்து குறித்து நாம் எதும் சொல்ல முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us