ADDED : அக் 18, 2025 08:04 AM

கரூர் சம்பவத்தை விசாரித்த, சிறப்பு புலனாய்வு குழுவின் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக வெளியான செய்தி, பல கேள்விகளை எழுப்புகிறது. விசாரணை முடியும் முன்பே, 'பென் டிரைவை', விசாரணை நடத்திய இடத்திலேயே எரிக்கும் அளவிற்கு, அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை, ஒரு தலைபட்சமான கருத்துகளை கூறிய நிலையில், தற்போது ஆவணங்களை எரித்தது, எதை மறைக்க; யாரை காப்பாற்ற.
சி.பி.ஐ., விசராணைக்கு, தி.மு.க., அரசு முதலில் மறுத்தது; சட்டசபை வளாகத்திலேயே, அமைச்சர்கள் அவசர கதியாக மாற்றி மாற்றி கருத்துகளை தெரிவித்தது; தற்போது, ஆவணங்கள் எரிக்கப்பட்டது என அனைத்துமே, தி.மு.க., அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டி காட்டுகின்றன. உண்மை உறங்காது. தமிழக பா.ஜ., உறங்கவும் விடாது.
- நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,