sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யாரெல்லாம் தினமலரின் விரோதிகள்? நிறுவனர் டி.வி.ஆர்., வகுத்த நெறி

/

யாரெல்லாம் தினமலரின் விரோதிகள்? நிறுவனர் டி.வி.ஆர்., வகுத்த நெறி

யாரெல்லாம் தினமலரின் விரோதிகள்? நிறுவனர் டி.வி.ஆர்., வகுத்த நெறி

யாரெல்லாம் தினமலரின் விரோதிகள்? நிறுவனர் டி.வி.ஆர்., வகுத்த நெறி


ADDED : அக் 02, 2025 06:52 PM

Google News

ADDED : அக் 02, 2025 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலியில் வசிக்கும். வசிக்கும் எம்.எப். நஸ்ரின் என்ற வாசகி, தினமலர் ஏன் தமிழ்நாட் டில் அல்லாமல் கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் துவங் கப்பட்டது என்று வாரமலர் அந்துமணியிடம் கேட்டிருந்தார். அதற்கு அந்துமணி அளித்த பதில் ஒரு வரலாற்றுச் சாட்சி.

தமிழர்கள் வாழும் கன் னியாகுமரியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மலையா ளம் பேசும் கேரளாவுடன் இணைத்து விட்டனர். அதைத் திரும்ப தமிழகத் துடன் சேர்க்க வலியுறுத்த வேண்டுமெனில் அங்கு தான் போராட வேண்டும் என்றார். அதற்காகவே திருவனந்தபுரத்திலேயே தினமலர் பிறந்தது. நோக்கம் நிறைவேறிய பின் அது நெல்லைக்கு வந்தது.இந்த பதிலுக்கு பின்னால் எவ்வளவு தைரியமும் தீர்மானமும் இருந்தது என்பதை நம்மால் உணர முடிந்தது.

மலையாள அதிகாரிகள், அரசியல்வாதிகள் நிரம்பிய ஒரு மண்ணில் நின்று 'கன்னியாகுமரி தமிழகத்துக்கே சொந்தம்' என்று முழங்குவது எளிதல்ல. இதை உணர்ந்து, தினமலர் நிறுவனர் டி.வி. ஆரின் வரலாற்றைப் புரிந்துகொள்ள 'கடல் தாமரை' நுாலைத் திறந்தேன். அங்கே அவரது ஆளுமை இன்னும் தெளிவாக தெரிந்தது.

பல ஏக்கர் உப்பளத்திற்கு சொந்தக்காரராக பெரும் செல்வந்தராக இருந்த டி.வி.ஆர் பணத்தைக் குவித்து ஆடம்பரமாக வாழ்வதில் ஆர்வம் கொண்டவர் அல்லர். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரை இயக்கியது. கன்னியாகுமரி தமிழ் மண்ணின் இதய மாக இருந்தபோதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதை மலையாளம் பேசும் கேரளாவுடன் இணைக்க முற்பட்டனர். இது தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. இதைத் தடுக்க வலிமையான ஒரு குரல் தேவைப்பட்டது. டி.வி. ஆர். அந்தக் குரலாக உருவெடுத்தார். போராட ஒரு வலுவான ஆயுதம் தேவைப்பட்டது. அந்த ஆயுதம் பத்திரிகைதான் என்பதை அவர் புரிந்து கொண்டார்.'

தன் சொந்த செல்வத்தையும், பூர்வீகச் சொத்தையும் விற்று, 1951 செப்டம்பர் 6 அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத் தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தினமலரை துவங்கினார். ஆசிரியரும் நிறுவனரும் அவரே. பத்திரிகை உலகில் முன் அனுபவமில்லாமல் களமிறங்கிய டி.வி.ஆர், வெற்றியடைய முடியாது என்று பலர் எச்சரித்த போதும் ஒருபோதும் பின் வாங்கவில்லை.

'தினச் செய்தி', 'தமிழன்', 'திங் கள்', 'தேவி' போன்ற பத்திரிகைகள் தோல்வியடைந்தன என்றெல்லாம் போதும் அவர் உறுதியுடன் இருந்தார். கூறி மனம் தளரச் செய்த போதும் அவர் மன உறுதியுடன் இருந்தார்.

திறப்புவிழாவிற்கு திருவிதாங்கூர் அமைச்சர் கேசவனை அழைத் திருந்தார்; தினமலரின் நோக்கத்தை அறிந்த அவர் கடைசி நேரத்தில் வராமல் இருந்துவிட்டார். ஆனால் அதனால் டி.வி. ஆர் கலங்கவில்லை. குறிப்பிட்ட நாளில் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு தினமலரைத் துவங்கி விட்டார்.

முதல்வர் ராஜாஜி கூட 'இன்றைய சூழலில் பத்திரிகை நடத்துவது மிகக் கடினம். இருந்தும் இவர் நடத்துகிறார் என்றால் அவரது உறுதியை நான் பாராட்டுகிறேன்' என்று தான் வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார்.

தொடக்கவிழாவில் மலையாள அதிகாரிகளும் பிரமுகர்களும் கூட்டம் சேர்ந்து இருந்தபோதும், டி.வி. ஆர் உறுதியாக, 'தினம லர் தமிழரின் உரிமையை நிலைநாட்டப் போரா டும்' என்று கர்ஜித்தார். அவரது தீர்மானம் வெறும் பேச்சில் மட்டு மல்ல. தலையங்கத்தில் கூட அவர் தன் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார்.

'எல்லா சிந்தனைகளுக்கும் தினமலரில் இடமுண்டு. ஆனால் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தினமலர் அவர்களை கடுமையாகக் கண்டிக்கும். வகுப்புவாதிகள், மதவெறியர்கள், பிற்போக்கு மனநிலை கொண்டவர்கள், குழப்பம் ஏற்படுத்துபவர்கள், நாட்டைக் கெடுக்கும் துரோகிகள், தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்கள் இவர்கள் அனைவரும் தினமலரின் விரோதிகள். இவர்களை முறியடிப்பதில் தினமலர் எப்போதும் முன்னணியில் நிற்கும்' என்று எழுதியிருந்தார்.

அந்த ஒரு வரியில் தினமலரின் தத்துவம் முழுமையாக அடங்கியுள்ளது. இது வெறும் செய்தித்தாள் அல்ல -ஒரு ஆயுதம். துப்பாக்கி போல சுடாதபோதும், ஒரு போராளியின் குரல் போல அச்சமின்றி எதிரிகளைச் சுட்டெரிக்கும்.இப்படி கன்னியாகு மரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டிய போராட்டத்தின் தீவிரத்தி லிருந்து பிறந்த தினமலர்,

அதன் நோக்கம் நிறைவே றிய பிறகு நெல்லைக்கு இடம் பெயர்ந்தது. ஒரு சின்ன கேள்வி-பதிலுக் குள் இத்தனை தீவிரமான வரலாறு ஒளிந்திருக்கிறது என் பதை நாம் உணர்ந்தால் தான், தினமலரின் பாதை எவ்வளவு ஆணித்தர மானது என்று புரியும். ஒரு கேள்வி பதிலில் கிடைத்த இந்த பதிவில் தான் எத்தனை தெளிவு விளக்கம் நன்றி அந்துமணி சார்.






      Dinamalar
      Follow us