ADDED : அக் 06, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'சசிகலா வீட்டை, ஆறு மாதமாக உளவு பார்க்கும் நபரை பிடித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவருக்கு சென்னை போயஸ் கார்டனில் மிகப் பிரமாண்டமான வீடு உள்ளது.
போலீஸ் என கூறிய நபர், அவரது வீட்டை ஆறு மாதமாக உளவு பார்த்ததாக, சசிகலா குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'சந்தேகத்துரிய அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கத் துவங்கி உள்ளனர்.