sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தே.ஜ., கூட்டணியில் யார் யார்? அமித் ஷா முடிவெடுப்பார்: பா.ஜ.,

/

தே.ஜ., கூட்டணியில் யார் யார்? அமித் ஷா முடிவெடுப்பார்: பா.ஜ.,

தே.ஜ., கூட்டணியில் யார் யார்? அமித் ஷா முடிவெடுப்பார்: பா.ஜ.,

தே.ஜ., கூட்டணியில் யார் யார்? அமித் ஷா முடிவெடுப்பார்: பா.ஜ.,

6


UPDATED : ஜன 13, 2026 02:34 AM

ADDED : ஜன 13, 2026 02:33 AM

Google News

UPDATED : ஜன 13, 2026 02:34 AM ADDED : ஜன 13, 2026 02:33 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: “த.வெ.க., தலைவர் விஜய்க்கு, சி.பி.ஐ., விசாரணை வாயிலாக நெருக்கடி தர வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்துக்கு ஜன., 23ல் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.

தொடர்ந்து, சென்னை, திருச்சியிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.

மதுரை பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சியினர் யாரெல்லாம் பங்கேற்பர் என்பதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்வர்.

மதுரை வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் செல்வாரா என்பது அவரது வேலைப்பளுவைப் பொறுத்தது. சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., அதிக சீட் கேட்கிறது என்பது குறித்தெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

பா.ம.க., அன்புமணிக்கு எதிராக தேர்தல் கமிஷனில் ராமதாஸ் கடிதம் அனுப்பியது பற்றி கருத்தில்லை. அது, அவர்களின் உட்கட்சி பிரச்னை.

த.வெ.க., தலைவர் விஜயை, தேர்தல் கூட்டணிக்காகவே சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறுவது தவறு. விஜய்க்கு நெருக்கடி தர வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us