தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ யாருடன் கூட்டணி? ராமதாஸ் நாளை முடிவு

 யாருடன் கூட்டணி? ராமதாஸ் நாளை முடிவு

 யாருடன் கூட்டணி? ராமதாஸ் நாளை முடிவு


UPDATED : பிப் 25, 2026 02:45 PM

ADDED : பிப் 25, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2026 02:45 PM ADDED : பிப் 25, 2026 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடக்கவுள்ளது.

'அதில், தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்' என கூறியுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளார். ஆனால், ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வால், எந்தக் கூட்டணியிலும் சேர முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின், கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை, ராமதாஸ் வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us