ADDED : டிச 21, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் ஆந்திராவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு, 1,328 கோடி ரூபாயை அனுமதித்ததற்காக, மத்திய அரசுக்கு நன்றி.
'பாரத்மாலா பரியோஜனா' திட்டம் துவங்கியதில் இருந்து, பிரதமர் மோடி தமிழகத்திற்கு, 2,414 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். மாநில அரசின் ஆதரவு இல்லாததால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

