ADDED : அக் 05, 2025 01:37 AM

கரூர் சம்பவத்திற்கு, தி.மு.க., பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகிறார். பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருப்பதால், அவர் அப்படித்தான் பேசுவார். ஆனால், மக்கள் தெளிவாக இருக்கின்றனர். நீதிமன்றம் கூறியது தான் உண்மை நிலை. கரூர் துயர சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது.
விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை, என பத்திரிகைகளும் சொல்லி இருக்கின்றன. த.வெ.க., கூட்டத்திற்கு அனுமதி பெற்றவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம், இது பற்றி கூறி இருக்கும் நிலையில், நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் சந்திப்போம். தமிழகத்தில் பல பிரச்னைகள் நடந்தபோதெல்லாம் வராத பா.ஜ., எம்.பி.,க்கள் குழு, கரூருக்கு மட்டும் உடனே வந்த காரணம் என்ன?
- நேரு
தமிழக அமைச்சர், தி.மு.க.,