ADDED : ஜன 24, 2026 05:34 AM

பெரம்பலுார்: கடந்த சில நாட்களுக்கு முன், பெரம்பலுாரில் வி.சி., கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வரும் சட்டசபை தேர்தலில், பெரம்பலுார் தனி தொகுதி யில் வி.சி.,க்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின்படியே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பெரம்பலுாரைச் சொந்த ஊராகக் கொண்ட தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு பிடிக்கவில்லை.
இதுகுறித்து, பெரம்பலுார் மாவட்ட வி.சி., கட்சியினர் கூறியதாவது:
பெரம்பலுார் தனி தொகுதியில், தன் குடும்பத்திலிருந்தோ, கட்சியில் தன் ஆதரவாளர் ஒருவரையோ போட்டியிட வைத்து, எம்.எல்.ஏ.,வாக்க வேண்டும் என ராஜா திட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில், வி.சி., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானம் போட்டதும், ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த கோபத்திலேயே, திருமாவை ஜாதி கட்சி தலைவர் என விமர்சித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

