தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்

எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்

எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்

87


ADDED : ஜூலை 04, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

87

ADDED : ஜூலை 04, 2026 06:32 AM


87
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியதன் பின்னணியில், ஸ்டாலினின் உத்தரவு எதுவுமே இல்லை. இந்த தகவல் அறிந்து, கோபம் அடைந்த ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். அதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

அப்போது, 'தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியையே வேண்டாம் என்று கூறினேன். ஆனால், நீங்களாக ஒரு முடிவை எடுத்ததால், கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இப்போது, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் எனக்கு தெரியாமல் ஏன் பேசினீர்கள்? பழனிசாமி முதல்வராக இருந்த போதே, குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர, நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

'தற்போது, செந்தில் பாலாஜி யார் உத்தரவில் இதை செய்தார் என்று எனக்கு தெரியும். இது போன்ற குறுக்கு யோசனையை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பழனிசாமியை முதல்வர் ஆக்குவதும், த.வெ.க., ஆட்சியை கவிழ்ப்பதும் நம் வேலையில்லை' என, ஸ்டாலின் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், ஸ்டாலின் உதவியாளர் தினேஷ் உள்ளிட்டோருக்கு, திரைமறைவில் நடக்கும் பேரம் தெரிந்திருக்கிறது. அதனால் தான், 'இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும்' என ஸ்டாலினை பேச வைத்துள்ளனர் என்கிறது கட்சி வட்டாரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us