வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சீட்டு முறையை காங்., ஏன் கொண்டு வரலை / ஓட்டுச்சீட்டு முறையை காங்., ஏன் கொண்டு வரலை
/
செய்திகள்
ஓட்டுச்சீட்டு முறையை காங்., ஏன் கொண்டு வரலை
ADDED : செப் 05, 2025 01:45 AM
காவிரி நீர், கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு, முல்லை பெரியாறு அணை போன்ற விவகாரங்களில், நீதிமன்றமே முடிவு எடுத்தால், சட்டசபையும், பார்லிமென்டும் எதற்கு? மக்களாட்சி வெறும் சொல்லாட்சியாகத் தான் இருக்கும். ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வால் கல்வித்தரம் எப்படி உயரும். போட்டித் தேர்வுகள் பயனற்றவை. ஓட்டு இயந்திரங்களை மாற்ற முடியும் என்றால், காங்கிரஸ் ஏன் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வரவில்லை. ஜாதி பிரச்னை, மனிதர்களால் உருவாக்கப்பட்டதே; அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும். அரசும், போலீசும் கோரிக்கைகளை ஏற்று தீர்க்கும் நிலையில் இல்லை. அவற்றை காலம் கடத்துவதில் தான் கவனம் செலுத்துகின்றன. கச்சத்தீவை கொடுத்தது, நீட் தேர்வை கொண்டு வந்தது எல்லாமே காங்கிரஸ் ஆட்சியில் தான்.- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர்