அமைச்சர்கள் இருக்கும்போது அதிகாரிகள் பேட்டி அளிப்பது ஏன்?
அமைச்சர்கள் இருக்கும்போது அதிகாரிகள் பேட்டி அளிப்பது ஏன்?
ADDED : அக் 01, 2025 06:09 AM

கரூர் துயரச் சம்பவத்துக்குப் பின், தி.மு.க., அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய்த் துறை செயலர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வுபெ ற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, பணியை து வங்கியுள்ளது.
இந்நிலையில், அரசின் செய்தி தொடர்பாளர் என்ற வகையிலும் கூட, ஒரு செயலர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? இந்த பேட்டி, விசாரணை குழுவின் கருத்துகளை பாதிக்கும் வகையிலும், நீதியை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.
உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு, இப்படிப்பட்ட நாடகத்தை, இந்த அரசு அரங்கேற்றி இருப்பது, மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
- பழனிசாமி
பொதுச்செயலர், அ.தி.மு.க.,