ADDED : ஜன 19, 2026 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும், தடையில்லாமல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், தி.மு.க., ஆதரவு பெற்றவர்களாக இருப்பதால், அவர்கள் மீது போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
கஞ்சா போதை சீரழிவால், யாருடைய உயிருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. கஞ்சா போதையை கட்டுப்படுத்த வேண்டும் என, முதல்வரிடம் பல முறை வலியுறுத்தி உள்ளேன். ஆனால், கஞ்சாவை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கஞ்சாவால் விளையும் படுகொலைகளுக்கு தி.மு.க., அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க., ஆட்சி மீது, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள, கஞ்சா படுகொலை சம்பவங்களே போதுமானவை.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

