இ.பி.எஸ்., பெயரை குறிப்பிடாதது ஏன்? செங்கோட்டையன் பதில் இதுதான்!
இ.பி.எஸ்., பெயரை குறிப்பிடாதது ஏன்? செங்கோட்டையன் பதில் இதுதான்!
ADDED : பிப் 14, 2025 11:39 AM

ஈரோடு: பொதுக்கூட்ட மேடையில் இ.பி.எஸ்., பெயரைக் கூறாதது ஏன் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என மேடையில் அழுத்தமாக கூறினேன்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
அ.தி.மு.க., கடந்த முறை தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் செங்கோட்டையன் பொதுக்கூட்டத்தில் பேசியது பேசும் பொருளானது. இது குறித்து, ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில், செங்கோட்டையன் கூறியதாவது: துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம் தான் காரணம் என சொன்னேன்.
நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே? ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை அவர் அதை கூறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பொதுக்கூட்ட மேடையில் இ.பி.எஸ்., பெயரைக் கூறாதது ஏன் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என மேடையில் அழுத்தமாக கூறினேன்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.