மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 29, 2025 11:48 AM

சென்னை: மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? என தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்.,5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் உள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க, மற்றும் த.வெ.க., உள்ளிட்ட கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளன. செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்கள் கொட்டகைக்கு அடைத்து வைத்தது போல் இந்த முறையும் அடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (ஜன.,29) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? யார் தான் சலுகைகள் வழங்கவில்லை?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.