ADDED : ஆக 12, 2024 08:15 AM

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று மாலை பெய்யத் துவங்கிய மழை, இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. பகல் நேரத்தில் வெயில் உக்கிரம் அதிகமாக இருந்த நிலையில், மாலை முதல் மழை பெய்யத் துவங்கியது.
மேற்கு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தபடி இருந்தது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று அதிகாலை கூட மழை பெய்தபடி இருந்தது. மழை பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் எங்கும் இல்லை.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு:
மதுராந்தகம்- 9.3 செ.மீ
தாம்பரம்- 8 செ.மீ
பாலக்கோடு - 14.2 செ.மீ
மாரண்டஹள்ளி- 5.5 செ.மீ
அரூர் - 4.2 செ.மீ
பாப்பிரெட்டிப்பட்டி - 3.5 செ.மீ
சென்னிமலை - 5.2 செ.மீ
ஈரோடு - 3.8 செ.மீ
கரூர், பஞ்சப்பட்டி- 8.9 செ.மீ
கரூர் டவுன் - 2.8 செ.மீ
கிருஷ்ணகிரி, நெடுங்கல்- 12. 3 செ.மீ
பேருகொண்டாபுரம்- 9.5 செ.மீ
கிருஷ்ணகிரி டவுன் - 7.6 செ.மீ
கே.ஆர்.பி., அணை- 7.3 செ.மீ
ஊத்தங்கரை- 4.9 செ.மீ
திருச்செங்கோடு- 4.5 செ.மீ
நாமக்கல் - 3.8 செ.மீ
பரமத்தி வேலுார் - 3.1 செ.மீ
ஆற்காடு- 9.2 செ.மீ
அரக்கோணம்- 8.5 செ.மீ
பாலார் அணைக்கட்டு- 8.2 செ.மீ
ராணிப்பேட்டை- 7.3 செ.மீ
ஏற்காடு - 7.9 செ.மீ
சேலம் - 6.5 செ.மீ
எடப்படாடி- 6.1 செ.மீ
மேட்டூர்- 5.8 செ.மீ
சிவகங்கை- 6.2 செ.மீ
மானாமதுரை- 5.7 செ.மீ
திருப்புவனம்- 3.8 செ.மீ
தென்காசி- 6 செ.மீ
மேல் பவானி - 3.4 செ.மீ
கீழ்கோத்தகிரி- 3.3 செ.மீ
சோத்துப்பாறை- 8.6 செ.மீ
ஆண்டிப்பட்டி- 5.6 செ.மீ
வைகை அணை- 4.9 செ.மீ
பெரியகுளம்- 4.6 செ.மீ
திருச்சி மருங்காபுரி- 3.7 செ.மீ
கயத்தார், துாத்துக்குடி- 5.3 செ.மீ
திருப்பத்துார்- 5.4 செ.மீ
ஆம்பூர்- 5.3 செ.மீ
திருப்பூர் - 7.4 செ.மீ
ஊத்துக்குளி- 5 செ.மீ
அவிநாசி- 3.5 செ.மீ
காரியப்பட்டி- 5 செ.மீ
பெரியாறு அணை - 4.6 செ.மீ

