ADDED : ஜூன் 29, 2026 06:01 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார-மாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வரு-கிறது. கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல், கடுமையான வெப்பம் வாட்டிய நிலையில், மாலை, 4:00 மணிக்கு, பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்-ததால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து சரிந்தது. அணைக்கு நேற்று முன்தினம், 699 கன அடிநீர் வந்த நிலையில் நேற்று, 653 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து நேற்று முன்தினம், 699 கன அடிநீர் திறக்-கப்பட்ட நிலையில் நேற்று, 534 கன அடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.75 அடியாக நீர்மட்டம் இருந்-தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்-டத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில், 32.10 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாரூர், 9.60, ஊத்தங்கரை, 8.20, பாம்பாறு அணை, 8, தேன்கனிக்கோட்டை, 7, கே.ஆர்.பி., அணை, 1.20 என மொத்தம், 66.10 மி.மீ., மழை பதிவாகி இருந்-தது.
